Tuesday, 24 March 2015

சாலட் மற்றும் பச்சடி

********************************************************************************
 

                              வாழைத்தண்டு சாலட் 

 
தேவையான  பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
ஊற வைத்த பயத்தம் பருப்பு - கால் கப்
கொத்த மல்லி இலை - சிறிதளவு
மிளகுத் தூள்- கால் தேக்கரண்டி


எலுமிச்சை சாறு - ஒரு மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு.
 

செய்முறை:
 
முதலில் பயத்தம்பருப்பை வேகைவத்துக்கொள்ளவேண்டும். பின்னர் வாழைத்தண்டுடன் வேக வைத்த பயத்தம்பருப்பு, எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இந்த சாலட் சீறுநீரகத்தை பலப்படுத்தும். உடம்பில் உள்ள கூடுதல் உப்பை வெளியேற்றும். மலச்சிக்கல் சரியாகும்.

*********************************************************************************
                                           மாதுளை  சாலட்




தேவையான பொருட்கள்:
மாதுளை முத்துக்கள்- ஒரு கப்,

 பொடியாக நறுக்கிய மாங்காய் (செங்காய்) - கால் கப், 

உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு, 
நறுக்கிய கொத்தமல்லி, புதினா - தலா அரை மேஜைக்கரண்டி,
 

செய்முறை:
எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பரிமாறவும், இரும்புச் சத்து அதிகம் கொண்ட மாதுளை, ரத்தசோகை நோயாளிகளுக்கு நல்லது. நினைவாற்றலையும் பெருக்கக் கூடியது.




******************************************************************************


இஞ்சிப் பச்சடி

தேவையானவை:

இஞ்சி - 100 கிராம்,
புளி - சிறிதளவு,
எலுமிச்சை - 4,
பெரிய வெங்காயம் - 2,
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.

மருத்துவப்பயன்:

பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.

No comments:

Post a Comment