Friday, 5 February 2016

சாமை இட்லி

சாமை இட்லி 

தேவையான பொருட்கள்


சாமை  - 250 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
வெந்தயம்   - ஒரு தேக்கரண்டி
உப்பு -  தேவையான அளவு
 

செய்முறை
 

சாமை அரிசி, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கழுவி தனித்தனியாக ஐந்து மணி நேரம் ஊறவைத்து பின்னர் இட்லிக்கு அரைப்பது போன்று அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து அதனை எட்டு மணிநேரம் புளிக்க விடவேண்டும். புளித்த பின்னர் இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பிடித்த சட்னியோடு உண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.


 

 சாமையின் பயன்கள்
 
சிறுதானியங்களில் சிறப்பிற்குரிய தானியமாகக் கருதப்படுவது சாமை.

சர்க்கரை நோயாளிகளுக்கு சாமை அரிசி உணவு ஒரு நல்ல உணவாகும்
நெல் அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்ச்சத்து கொண்ட தானியம் சாமை ஆகும். இதனை உணவாக உட்கொண்டால் நீரழிவு நோயினை கட்டுப்படுத்தலாம், வராமலும் தடுத்திட முடியும்.

சாமையில் மற்ற தானியங்களைக் காட்டிலும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்தச்சோகை வருவதற்கான வாய்ப்பினைக் குறைக்கிறது.


சாமை அரிசி உணவுகளைச் சாப்பிட்டால் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும்.

தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.

வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.





பொதுவாக முதியவர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. உடம்பிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேரவில்லை என்றாலே அது மற்ற நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும்.

நோய்களுக்கெல்லாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை.

வயிற்றுக் கோளாறுக்கு சாமை நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரை பொருட்களையும் தரும் உணவு வகைகளை அதிகம் சாப்பிடுகிறோம். அவ்வாறு உண்பதைத் தவிர்த்து, இம்மாதிரியான பாரம்பரிய தானியங்களில் செய்த உணவினை உட்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது நிச்சயம்.

No comments:

Post a Comment