Saturday, 21 March 2015

பூசணி இட்லி

பூசணி இட்லி

தேவையானவை:

இட்லி மாவு - 2 கப்,
அரைத்த வெள்ளைப் பூசணி விழுது - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.


செய்முறை:

வெள்ளைப் பூசணியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தேவைக்கு ஏற்ப சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும்.


இட்லி மாவில் பூசணி விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.

கலக்கிய பின், வழக்கம் போல் இட்லி தட்டுக்களில் வார்த்து, வேகவைத்து எடுத்தால் பஞ்சுபோன்ற இட்லி கிடைக்கும்.

மருத்துவப் பயன்:

உடம்பில் தேவை இல்லாமல் சேர்ந்திருக்கும் நீரை அகற்றும். பெண்களுக்கு ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது.


*****************************************************************************
                    
  மூலிகை இட்லி

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி = 250 கிராம்
உளுந்து  = 175 கிராம்
துளசி இலை = ஒரு கைப்பிடி
தூதுவளை இலை = ஒரு கைப்பிடி
கற்பூரவல்லி இலை = ஒரு கைப்பிடி
உப்பு தேவையான அளவு


செய்முறை

அரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து எடுத்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக்கொள்ளவும். சுமார் 6 அல்லது 7 மணி நேரம் அதனை வைத்திருந்து புளிக்கவிடவும். மூலிகை இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு அந்த இலைகளை மாவுடன் அரைத்து அல்லது அப்படியே கலந்து தேவையான உப்பையும் சேர்த்துக்கொண்டு வழக்கமாக இட்லி போல் ஊற்றிக்கொள்ளவேண்டும். இப்போது சுவையான மூலிகை இட்லி தயார். இதனை குழந்தைகளுக்கு கொடுக்க சளி இருமல் போன்றவை குணமாகும்.

No comments:

Post a Comment