அரிசி கிச்சடி
தேவையானவை
அரிசி=2 ஆழாக்கு
பச்சைப்பருப்பு= அரை ஆழாக்கு
பெரிய வெங்காயம்=2 நீளமாக நறுக்கியது
பூண்டு= 10 பல்லு
பச்சை மிளகாய் = 10 நீளமாக கீறியது
தேங்காய் துருவியது = அரை தேங்காய்
நெய் = அரை குழிகரண்டி
இலவங்கம் = 4
பட்டை = 2
ஏலக்காய் = 4
எண்ணெய் = ஒரு குழி கரண்டி
கறிவேப்பிலை,கொத்தமல்லி தேவையான அளவு
செய்முறை
இதை குக்கரிலேயே செய்யலாம்.
முதலில் அரிசி மற்றும் பச்சை பருப்பை அரை மணிநேரம் ஊரவைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை இலவங்கம் ஏலக்காய் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் போடவும். சிறிது வதங்கியவுடன் பச்சை மிளகாய் பூண்டு போட்டு வதக்கவும். அடுத்து தேங்காய் துருவலை போட்டு வதக்கவும்.
5 ஆழாக்கு தண்ணீர் சேர்த்து அதில் ஊரவைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பு தேவையான அளவு உப்பு போட்டு வேகவைக்கவும்.
இப்போது அருமையான அரிசி கிச்சடி தயார். இதை சூடாக மாங்காய் தொக்கு ஊறுகாயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment